சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள்!! தேர்ச்சி விகிதம் என்ன?

0
173
CBSE 10th and 12th Exam Results!! What is the pass rate?

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள்!! தேர்ச்சி விகிதம் என்ன?

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 10ம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி மார்ச் 21ம் தேதி முடிவடைந்தது. அதே போல்  12ம் வகுப்பு தேர்வுகள்  பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ம் தேதி முடிவடைந்தது.

இன்று காலை சிபிஎஸ்இ 12ம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வினை சுமார் 17 லட்சம் மாணவ மாணவிகள் எழுதினர். இந்த முறையும் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதமே அதிக அளவில் உள்ளது. இந்த வருடம் 87.33% தேர்ச்சி விகிதமாக உள்ளது. சென்ற ஆண்டு தேர்ச்சி விகிதம் 92.71% ஆகும். கடந்த ஆண்டை விட 5.38% தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.

இந்த முறை 99.91% தேர்ச்சி விகிதத்துடன் திருவனந்தபுரம் மண்டலம் முதலிடம் பெற்றுள்ளது. 99.18% தேர்ச்சி பெற்று பெங்களுரு இரண்டாம் இடத்திலும், சென்னை 99.14% தேர்ச்சி பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 94.03% மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்வு எழுதியவர்களில் மாணவிகள் 96.38% , மாணவர்கள் 91.45% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தற்போது 10ம் வகுப்புக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பிலும் மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு 21 லட்சத்திற்கும் அதிகமான  மாணவ மாணவியர் 10ம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதியுள்ளனர். 12ம் வகுப்பை போல் 10ம் வகுப்பு தேர்ச்சி விகிதமும் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 94.40% ஆக இருந்தது.

இந்த ஆண்டு 93.12% மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் சற்று குறைந்துள்ளது. தேர்வு எழுதியவர்களில் 92.45%  மாணவிகளும், 92.27% மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவ மாணவியரிடையே போட்டி மனப்பான்மையை வளர்க்க கூடாது என இந்த வருடம் யார் முதலிடம், இரண்டு மற்றும் மூன்றாம் இடம் என சிபிஎஸ்இ அறிவிக்கவில்லை. இருந்தாலும் அதிக பாடங்களில், அதிக மதிப்பெண்கள் எடுத்த 0.01% மாணவ மாணவியருக்கு தகுதி சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இந்த பொதுத்தேர்வின் தேர்ச்சி விகிதத்தில், திருவனந்தபுரம் முதல் இடத்திலும், கௌஹாத்தி கடைசி இடத்திலும் உள்ளது. மேலும் 5 பாடங்களில் ஏதேனும் பாடத்தில் மாணவ மாணவியர்கள் 33% குறைவான மதிப்பெண்கள் பெற்றிருந்தால், ஜூலை மாதம் நடைபெறும் காம்பர்ட்மென்ட் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டாளர் சைன்யம் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.