Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிபிஎஸ்சி 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்! வெளியான புதிய அறிவிப்பு!

சிபிஎஸ்சி 10ஆம் வகுப்பின் தேர்வு முடிவுகள் நேற்றைய தினமே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலையில், சிபிஎஸ்சி 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மேலும் 10 நாட்கள் தாமதமாக வெளியாகும் என்று தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.

நோய் தொற்று பரவல் காரணமாக, 2020 21 காலியாண்டுக்கான பொதுத் தேர்வை 2 கட்டமாக சிபிஎஸ்சி நடத்தியது. முதல் கட்ட தேர்வில் 50 சதவீத பாடத்திட்டங்களில் இருந்து கொள் குறி வகை வினா விடை மூலமாக மாணவர்கள் மதிப்பீடு செய்யப்பட்டார்கள்.

அதற்கான தேர்வு முடிவுகள் முன்னரே அறிவிக்கப்பட்டு விட்டது கடந்த ஏப்ரல் மாதம் ஆரம்பமான 2வது கட்ட தேர்வு நடைபெற்று வந்தது. இதில் புறநிலை வகை வினாக்களும், அகநிலை வினாக்களும் இடம் பெற்று இருந்தனர்.

மாணவர்கள் நடைபெற்ற இரண்டு கட்ட தேர்வுகளிலும் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களின் செயல்பாடு உள் மதிப்பீடு அடிப்படையிலும் இறுதி கட்ட மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும் என சிபிஎஸ்சி தெரிவித்திருந்தது.

இருந்தாலும் சிறந்த செயல் திறனடிப்படையில் ஏதாவது ஒரு அமர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும் என்று மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

இதற்கு முன்னதாக நோய் தொற்று பரவல் காட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால் எதிர்வரும் கல்வி ஆண்டு முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளை ஆண்டு இறுதி தேர்வு என்று அழைக்கப்படும் பழைய முறையில் நடத்துவதற்கு சிபிஎஸ்சி முடிவு எடுத்திருப்பதாக தெரிகிறது.

இந்த சூழ்நிலையில், சிபிஎஸ்சி 10ஆம் வகுப்பின் தேர்வு முடிவுகள் நேற்றைய தினமே வெளியாகும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

இருந்தாலும் மேலும் 10 நாட்கள் தாமதமாக தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தகவல்கள் கிடைத்திருக்கின்றன. ஆகவே மாணவர்கள் மேலும் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை தற்போது ஏற்பட்டிருக்கிறது.

Exit mobile version