சிபிஎஸ்இ தேர்வுககள் ரத்து! மறுபரிசீலனை செய்யுமா மத்திய அரசு?
இக்காலத்தில் கொரோனாவால் மக்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர்.அதுமட்டுமின்றி பல உயிர்களையும் இழந்து வருகின்றோம்.தற்போது உலகளவில் கொரோனாவின் இரண்டாவது அலை உருவாகி வரும் நிலையில் பல நாடுகளில் மக்கள் பாதுகாப்பாக இருக்ககோரி அந்நாட்டின் அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் மீண்டும் பள்ளிகள்,கல்லூரிகள் திறக்கப்பட்டு அதிக அளவு கொரோனா தொற்று பரவிய நிலையில் மீண்டும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது.
12வகுப்புகளுக்கு தேர்வு நடத்தப்படும் என அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.அதனால் மத்திய காங்கிரஸ் செயலாளர் பிரியங்கா காந்தி மத்திய அரசிடம் தேர்வை ரத்து செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.அதில் அவர் கூறியது,சிபிஎஸ்இ 10 வகுப்பு மற்றும் 12 வகுப்பு தேர்வுகள் மே 4 தொடங்கயிருக்கிறது.தற்போது கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வரும் நிலையில் இந்தநிலையில் மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டால் மாணவர்களுக்கும் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
அவ்வாறு தொற்று பரவினால் தேர்வு மையம் முழுவதும் கொரோனாவின் தீவீர மையமாக மாறிவிடும் என்று கூறியுள்ளார்.அதுமட்டுமின்றி இந்த கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் மாணவர்களை தேர்வெழுத வைப்பது அவர்களுக்கு தேவையற்ற பதற்றத்தை கொடுக்கும்.அவ்வாறு தேர்வு எழுதி மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டால் அதன் முழு பொறுப்பும் மத்திய அரசும் சிபிஎஸ்இ வாரியமும் தான் பொறுப்பேற்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இதனோடு இத்தொற்றால் அதிக பாதிக்க படக்கூடிய மாணவர்களுக்கோ அல்லது அவர்களையோட்டிய பிறருக்கோ ஏற்பட்டால் அதன் முழு பொறுப்பும் மத்திய அரசும் சிபிஎஸ்இ வாரியமும் சட்டபூர்வமாக பொறுப்பேற்க பரிசீலிக்க விரும்புகின்றனவா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.கூட்டம் கூடும் தேர்வு மையங்களில் பாதுகாப்பை உறுதிபடுத்துவது சாத்தியமில்லை என்பதால் சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.இதற்கு அவரது சகோதர் மற்றும் காங்கிரஸ் எம்.பி யுமான ராகுல்காந்தி ஆதரவு தெரவித்துள்ளார்.தற்போது கொரோனா 2 வது அலை உருவாகி வரும் நிலையில் இத்தேர்வு நடத்துவதை குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.