மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைப்பு!! வெளிவந்த சூப்பரான தகவல்!!

0
135

மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைப்பு!! வெளிவந்த சூப்பரான தகவல்!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றானது மிகவும் கடுமையாக பாதித்து இருந்தது. இந்த நிலையில் அதன் காரணமாக பல உயிர்கள் இறந்தன. மேலும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளி, கோவில்கள் மற்றும் கடைகள் என அனைத்தும் முழுவதுமாக இழுத்து மூடப்பட்டது.

அது மட்டுமல்லாமல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்குகள் மற்றும் தளர்வுகளற்ற ஊரடங்குகள் என்று தமிழக அரசால் கடைபிடிக்கப்பட்டது. அப்படி கெடுபிடிகள் இருந்த போதிலும் மக்கள் பொது இடங்களில் கூட்டம் கூட்டமாக தான் சுற்றி திரிந்தனர்.

இதன்பின் கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த அரசு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தியது. இதனை அடுத்து கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல கட்டுக்குள் வந்தது

இந்த நிலையில் சிபிஎஸ்இ பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2020-2021 ஆம் கல்வியாண்டிற்கான பாடத்திட்டங்கள் இரண்டு பருவங்களாக பிரித்து செயல்படுத்தப்படும் என்று சிபிஎஸ்இ சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் தற்போது சிபிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு உள்ளதாக நடப்பு கல்வி ஆண்டுகளில் அறிவிக்கப்பட்டிருந்தது. பாடத்திட்டங்கள் ஏற்கனவே இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டு இருந்த நிலையில், எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறை தேர்விற்கான மதிப்பெண்கள் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து இரண்டு பருவத்திற்கும் பாடத்திட்டம் மற்றும் மதிப்பெண்கள் 50 சதவீதமாக குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் மற்றும் மதிப்பெண்கள் உள்ளிட்ட அறிவிப்புகள் குறித்து விவரங்களை http://www.cbscacademic.nic.in/ என்ற இணையதளத்தின் மூலமாக தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.