அண்ணாமலையார் கோவிலில் சாமி சிலையின் நெற்றியில் பொருத்திய சிசிடி! திருவண்ணாமலையில் அரங்கேறிய விபரீதம்!
திருவண்ணாமலையில் தீப திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் முடிவடைந்து விட்டது. இதனையடுத்து தீப திருவிழாவானது வரும் ஆறாம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதனையொட்டி திருவண்ணாமலைக்கு அனைத்து ஊர்களிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வருவர்.
இதற்காக தமிழக அரசு ஆயிரம் சிறப்பு பேருந்துகளை இயக்கியுள்ளது. மேலும் மக்களின் பாதுகாப்புக்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கண்காணிப்புக்காக சிசிடிவி கேமரா அண்ணாமலையார் கோவிலில் பொருத்தப்பட்டு வருகிறது.அவ்வாறு பொருத்தப்பட்டுள்ள கேமரா சாமியின் நெற்றியில் துளை போட்ட அதன் வழியாக கண்காணிப்பு கேமராவை பொருத்தியுள்ளனர்.
இது தற்பொழுது சர்ச்சையாக மாறியுள்ளது. கோவில் நிர்வாகம் எவ்வாறு சாமியின் முகத்தில் இவ்வாறு துளையிட்டு கேமராவை பொருத்தலாம் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். பல எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் உடனடியாக துவாரபாலகர் நெற்றியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவை அகற்றினர். பின்பு அந்த சிசிடிவி கேமராவை வேறொரு இடத்தில் பொருத்தினர்.