Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

50 ஆண்டுகளை கொண்டாடும் அவள் ஒரு தொடர்கதை!! படத்தின் சுவாரசியங்களை பகிர்ந்த தயாரிப்பாளர்!!

1974 ஆம் ஆண்டு திரைக்கு வந்த அவள் ஒரு தொடர்கதை என்ற திரைப்படமானது இயக்குனர் பாலச்சந்திரன் இயக்கப்பட்டு நடிகர் கமல் மற்றும் நடிகை சுஜாதா நடிப்பில் திரையரங்குகளில் வெற்றிகரமாக 100 நாட்கள் ஓடிய திரைப்படம் ஆகும்.

 

இத்திரைப்படம் தன்னுடைய ஐம்பதாவது ஆண்டு விழாவினை கொண்டாடும் விதமாக இப்படத்தின் தயாரிப்பாளர் இப்படம் குறித்த சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து உள்ளார். அவற்றை இப்பதிவில் காண்போம்.

 

இயக்குனர் சிகரம் இந்த படத்திற்காக கதாநாயகியை தேடும் பொழுது அவருக்கு எர்ணாகுளம் படத்தில் 2 பீஸ் உடையில் நடித்த சுஜாதாவின் நடிப்பு மிகவும் பிடித்திருந்தது. தனது படத்துக்கு இவள் தான் கதாநாயகி என்று முடிவு செய்திருக்கிறார். ஆனால் ஆரம்பத்தில் சுஜாதா நன்றாக நடிக்காததால் கோபமடைந்த இயக்குனர் அவரிடம் கத்தவே தேம்பித் தேம்பி அழுத சுஜாதா, அதன்பின் அனைத்து காட்சிகளிலும் இயக்குனர் சிகரமே பிரமித்து பார்க்கும் அளவு சிறப்பாக நடித்திருக்கிறார் என்று பாலச்சந்தர் அவர்களே ஆச்சரியப்பட்டு கூறியிருக்கிறார்.

 

அந்த வகையில் பாலசந்தர் ஒருவரைப் பார்த்த மாத்திரத்திலேயே அவருடைய திறமை எப்படி இருக்கும் என்பதை எடை போடுவதில் வல்லவர். அப்படித்தான் சுஜாதா விஷயத்திலும் இருந்துள்ளது என இப்படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்திருக்கிறார்.

 

மேலும் இத்திரைப்படத்தின் மற்றொரு முக்கிய கதாபாத்திரமான விகடகவிக்கு கன்னிப்பருவத்திலே படத்தில் நடித்த ராஜேஷ் சரியாக வருவார் என்று நினைத்தார் பாலசந்தர். ஆனால் அவர் மனதில் ஒரு தயக்கம் ஏற்படவே வேறொரு நபரை தேடிவந்துள்ளார். இவ்வாறு இருக்க ஒரு நாள் அவர் காரில் செல்லும் பொழுது எதிரில் கமல் நடந்து வந்திருக்கிறார். அதன்பின் அவரையே பேசி இயக்குனர் சிகரம் நடிக்க வைத்துள்ளார்.

 

3 நாளில் திட்டமிட்டு அந்தப் படப்பிடிப்பை நடத்தி முடித்தார் பாலசந்தர். அதனால் பெரிய லாபம் கிடைத்தது என்கிறார் தயாரிப்பாளர் ராம அரங்கண்ணல். இந்த மாதிரி பாலசந்தர் திட்டமிட்டபடி பணியாற்றாமல் இருந்தால் நான் கடன்சுமையில் மூழ்கி இருப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

Exit mobile version