Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சித்ராவின் வழக்கை கையில் எடுக்கிறாரா சவுக்கு சங்கர்? அடுத்தடுத்து சிக்கும் பிரபலங்கள்!

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 9ம் தேதி சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார்.

அவருடைய மரணம் குறித்து வெளியான மர்மம் தற்போது வரையில் நீடித்து வருகிறது. இந்த வழக்கில் சித்ராவுடன் வசித்து வந்த அவருடைய கணவர் ஹேம்நாத் என்பவர் கைது செய்யப்பட்டு அதன் பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஆனாலும் சித்ராவிடம் பலரும் நெருக்கமாக இருந்து விட்டு அதன் பிறகு சித்ராவிற்கு தொந்தரவு கொடுத்து வந்தனர் எனவும், அந்த ரகசியங்கள் ஹேம்நாத் மூலமாக வெளியே கசிந்து விடக்கூடாது என்பதற்காகவே சித்ரா அவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, அவர் தன்னுடைய உயிரை தானே மாய்த்து கொண்டார் என்றும் தகவல் கிடைத்திருக்கிறது.

இந்த வழக்கை பொறுத்த வரையில் தொடர்ந்து பல முக்கிய புள்ளிகளின் பெயர் அடுத்தடுத்து அடிபட்டு வருகிறது. ஆனால் அதனை தெரிந்து கொண்டவர்கள் சித்ராவுக்கு நெருக்கமானவர்கள் அது தொடர்பாக பேசாமல் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக சித்ராவை காதல் செய்து அவருடைய நிழலில் வாழ்ந்துவந்த ஹேமந்த்தே பல ரகசியங்களை வெளியிட பயப்படுகிறார் என்றும் சொல்லப்படுகிறது.

மனைவியின் தற்கொலைக்கு காரணமானவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்தாமல் தன்னுடைய உயிரை காப்பாற்றிக்கொள்ள முயற்சி செய்கிறார். அவர் உண்மையில் சித்ராவை காதலித்திருப்பாரா என்ற சந்தேகங்களும் எழத்தான் செய்கிறது.

அதோடு சித்ராவை அரசியல் புள்ளிகளுக்கு அவரே அனுப்பி வைத்திருக்க வாய்ப்பிருக்கிறது என பிரபல புலனாய்வு பத்திரிகையில் தகவல் வெளியானது.

இந்த சூழ்நிலையில், சித்ராவின் தற்கொலைக்கு உண்மையான நியாயம் வேண்டும் என்றால் வேறு ஒருவர் இந்த விவகாரத்தை கையிலெடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் கிளம்பத் தொடங்கின. அதாவது சவுக்கு சங்கர் இந்த விவகாரம் தொடர்பாக பேச வேண்டும் என்று கோரிக்கை சமூக வலைதளங்களில் எழுந்திருக்கிறது.

ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் பல மர்மங்களை ஆதாரத்துடன் விளக்கி வருகிறார்.சவுக்குஷங்கர் சித்ரா வழக்கில் முன்னாள் அமைச்சர், முன்னாள் சட்டசபை உறுப்பினர் மகன், உள்ளிட்டோருக்கு தொடர்பிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், சவுக்கு சங்கர் ஏன் இதுதொடர்பாக பேசாமல் இருந்து வருகிறார் என்றும் வலைதள கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

நடிகை சித்ராவிற்கு போதைப்பொருள் பழக்கமிருக்கிறது அவருடைய அறைக்குள் பாக்கெட் பாக்கெட்டாக ஆணுறை இருந்தது என்றும், தகவல்கள் வெளியானது. இது உண்மையா என்பது கூட இதுவரையில் தெரிவிக்கப்படவில்லை.

சித்ரா விடுதிக்கு விஐபி கார் வந்து சென்றதன் பின்னணி என்னவாக இருக்கும் என்ற சந்தேகங்களுக்கு இன்னமும் விடை கிடைக்கவில்லை என்பதால் சவுக்கு சங்கர் இந்த விவகாரத்தை கையில் எடுக்க வேண்டுமென்று நெட்டிசன்கள் ஆர்வத்துடன் தெரிவித்து வருகிறார்கள்.

Exit mobile version