Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரபல செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்க்கு விவாகரத்து ஆக போகுதா?? அப்படி என்ன நடந்தது??

Celebrity newsreader Anita Sampath is going to get divorced ?? So what happened ??

Celebrity newsreader Anita Sampath is going to get divorced ?? So what happened ??

பிரபல செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்க்கு விவாகரத்து ஆக போகுதா?? அப்படி என்ன நடந்தது??

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக்கும் சீரியல் மற்றும் இதர நிகழ்ச்சிகளைத் தவிர பொது மக்கள் தினமும் பார்ப்பது செய்திகள். அந்த செய்திகளை உண்மையாகவும் அழகாவும் தொகுத்து மக்களிடம் கொண்டு சேர்ப்பது அந்த நிகழ்ச்சியின் கடமை. அதுமட்டுமின்றி செய்திகளை வாசித்து மக்களை கவர்தல் அந்த செய்தி வாசிப்பாலரின் மிகவும் முக்கிய பங்கு. அதிலும் குறிப்பாக செய்தி வாசிப்பவர்கள் செய்தியை வாசிக்கும் விதத்தைப் பொருத்து அந்த செய்தியை தொடர்ந்து பார்ப்பதும் பார்க்காமல் வேறு செய்தி தொலைக்காட்சியை மாற்றுவதும் அவர்களின் திறமையில் உள்ளது.

அதனால் செய்தி வாசிப்பாளர்களை தேர்ந்தெடுக்கும் முறை மற்றும் அவர்கள் செய்தி வாசிக்கும் முறை மிகவும் முக்கியம். இந்த வகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் செய்திகளை பிரபல செய்திவாசிப்பாளர் அனிதா சம்பத் மிகவும புகழ்பெற்றவர். அவர் பல ஆண்டுகளாக சன் தொலைக்காட்சியில் செய்திவாசித்து வருகிறார். இவர் வாசிக்கும் செய்திகளை பார்ப்பதர்கென தனி ரசிகர் கூடமே உள்ளது.   மேலும் இவர் சமீபத்தில் ஒளிபரப்பான விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சி வருடந் தோறும் விஜய் டிவியில் நடைபெற்று வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது நடிகர் திலகம் கமலஹாசன். மேலும் அந்த நிகழ்ச்சியில் அனிதா சம்பத் கடந்த சீசனில் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியின் மூலம் அனிதா சம்பத் மக்களிடம் வெறுப்பை தான் அதிகம் சம்பாதித்துக் கொண்டார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஜோடிகள் என்னும் நடன நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அந்த நிகழ்ச்சியில் அனிதா சம்பத் பங்கேற்றுள்ளார். இந்த நிலையில் அனிதா சம்பத் அவரது கணவர் பிரபாகரனை விவாகரத்து செய்ய உள்ளார் என்கின்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து அனிதா சம்பத் கூறுகையில் இந்த செய்தி உண்மை இல்லை. இது முழுக்க முழுக்க இணையதளத்தில் உருவான வதந்தி மட்டுமே என்று கூறு  உள்ளார்.

Exit mobile version