Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டிஆர்பி ரேட்டிங்கில் வீழ்ச்சி கண்ட பிரபல தொலைக்காட்சி நிறுவனம்!அதிர்ச்சி ரிப்போர்ட்!

தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒவ்வொன்றும் தங்கள் டிஆர்பி ரேட்டிங்கை அதிகப்படுத்த அவ்வப்போது புதுப்புது நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது வழக்கம். பேரிடர் காரணமாக ஊரடங்கு தீவிரமாக அமலில் இருந்ததால்  அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களின் சீரியல்களும் நிறுத்தப்பட்டன. தனியார் தொலைக்காட்சிக்கு டிஆர்பி ரேட்டிங் விறுவிறுவென ஏறுவதற்கு மிக முக்கிய காரணம் அதில் ஒளிபரப்பாகும்  சீரியல்கலே.

அந்த வகையில் இதுவரையில் டி ஆர் பி யில் முன்னணியில் இருந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி கடும் வீழ்ச்சியை கண்டு உள்ளது. இதற்கு மிக முக்கியமான காரணம் சீரிய நடிகர் நடிகைகள் வெளிமாநிலத்தில் மாட்டிக்கொண்டு படப்பிடிப்பிற்கு வர முடியாத சூழ்நிலையே ஆகும். இவர்கள் வேறு வழியில்லாமல் இந்த நிகழ்ச்சிகளில் இருந்து தூக்கி எறியப்பட்டன.

என்னதான் தளர்வுக்கு பின்பு சீரியல்கள் மறுபடியும் ஒளிபரப்பானாலும் பழைய நடிகைகள் நடிகர்கள் இல்லாததாலும் சுவாரசியமான  கதைக்களம் இல்லாததாலும் சேனலின் டிஆர்பி வீழ்ச்சியை கண்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருந்த  சீரியல்களில் ஒன்று தான் நாம் இருவர் நமக்கு இருவர். இதில் தேவி என்ற கேரக்டரில் ரக்க்ஷா ஹோலா நடித்திருந்தார். அவருடைய எதார்த்தமான நடிப்பும் திமிரும் பாவனைகளும் தமிழ் மக்களை பெருமளவில் ஈர்த்தது என்றே கூறலாம்.

தற்போது ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் கதைக்களம் பழைய கதையை காட்டிலும் முற்றிலும் வேறுபட்டது. இதனால் விஜய் டிவி வெறும்  448388 பார்வையாளர்களை பெற்று சென்ற வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் செம்பருத்தி சீரியல் மற்ற சீரியல்களுக்கு எல்லாம் கடும் போட்டியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. ஆனால் அது இப்பொழுது முற்றிலும் மாறி 467926 பார்வையாளர்களை பெற்று டிஆர்பி ரேட்டிங்கில் இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது. இதற்கு அந்தக் கதையின் சுவாரசியம் குறைந்ததே காரணம் .

சன் டிவியின் முன்னணி சீரியல்கள் ஆன ரோஜா நாயகி போன்றவை கலை இழந்து காணப்பட்டாலும் 835106 பார்வையாளர்களை கொண்டு  டி ஆர் பி யில் முதலிடத்தை பெற்றது.

 விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பான பின்னர்தான் இந்த நிலையில் மாற்றம் ஏற்படும் என்று  விஜய் டிவி தொலைக்காட்சி நிறுவனத்தால் நம்பப்படுகிறது.

 

Exit mobile version