Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரபல வீ.ஜே மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Celebrity VJ Death! Shocked fans!

Celebrity VJ Death! Shocked fans!

பிரபல வீ.ஜே மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பிரபல வீடியோ ஜாக்கியாக இருந்தவர் அனந்த கண்ணன். இவர் 90ஸ் கிட்ஸ் ன் பேவரட் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவார். முதலில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தான்  இவர் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தார். இவர் ரேடியோவிலும் ஜாக்கியாக இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது.  அதன் பிறகு சன் டிவியில் சிந்துபாத் என்ற சீரியலில் நடித்து மக்கள் மனதிலும், மத்தியிலும் மிகவும் பிரபலமானவர் ஆனார். அதன் பிறகு பிரபலமாக வலம் வந்த இவர் சில திரைப்படங்களிலும் நடித்து இருந்தார்.

அதன் பிறகு புற்று நோயால் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு கொடுத்த சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். சிந்துபாத் உள்ளிட்ட சீரியல்கள், திரைப்படங்கள் என பலவற்றில் நடித்ததும் குறிப்பிடத் தக்கது. அதன்பிறகு சின்னத்திரை, வெள்ளித்திரை என எங்கும் ஆனந்த கண்ணனைப் பார்க்க முடியவில்லை.

இந்த சூழலில் அனந்த கண்ணன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செய்தி வெளிவந்தது. இவரது மறைவுக்கு திரைத்துறை சார்ந்த நண்பர்கள், சின்னத்திரை நடிகர்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இது அவரது  ரசிகர்கள்  பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரது மறைவிற்கு வெங்கட் பிரபு ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அதனை தொடர்ந்து பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

https://twitter.com/vp_offl/status/1427339887712227358?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1427339887712227358%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=http%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F

Exit mobile version