Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இனி இந்த கோவிலுக்குள் செல்போன் எடுத்து செல்ல தடை! உய்ரநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Cell phones are now prohibited inside the temple! Supreme Court action order!

Cell phones are now prohibited inside the temple! Supreme Court action order!

இனி இந்த கோவிலுக்குள் செல்போன் எடுத்து செல்ல தடை! உய்ரநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவில் அர்ச்சகர் சீதாராமன் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் சாமிக்கு அபிஷேகம் ,பூஜை ஆகியவற்றை செல்போனில் பதிவு செய்வதாக புகார் எழுந்து வருகின்றது.

இது ஆகம விதிகளுக்கு முரணானது என கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.இந்த வழக்கானது முன்னதாகவே விசாரிக்கப்பட்டது.தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை உள்ளது.

மேலும் திருப்பதி கோவிலில் வாசலில் கூட படம் எடுக்க முடியாது.ஆனால் தமிழ்நாட்டில் தான் சாமி சிலைகளுக்கு முன்பு செல்பி எடுத்துக்கொள்ளும் அளவிற்கு சுகந்திரம் அளிக்கின்றனர்.கோவில் என்பது சாமி தரிசனம் செய்வதற்கு தான் ஆனால்  சுற்றுலாதலமாக நினைத்து கொண்டுள்ளனர்.

கோவில்களுக்கு வருபவர்கள் நாகரிகமான உடைகள் அணிந்து வாராமல் டி-ஷர்ட், ஜீன்ஸ், ஷார்ட்ஸ், லெகின்ஸ் போன்ற ஆடைகளை அணிந்து வருவதை ஏற்று கொள்ள முடியாது என  உயர்நீதிமன்றம்  தெரிவித்துள்ளனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள் கடந்த மாதம் 14 ஆம் தேதி முதல் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் செல்போன்களை பாதுகாப்பதற்காக செல்போன் பாதுகாப்பகம் அமைக்கப்பட்டுள்ளது.

அங்கு 300 செல்போன் வைக்கும் வகையில் சிறி சிறு அறைகள் அமைக்கப்பட்டு அதற்கான டோக்கன் தரும் வசதி செய்யப்பட்டு வருகிறது.தடையை மீறினால் செல்போன்கள் பறிமுதல் செய்யப்படும். பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் திருப்பி தரமாட்டாது என கோவில் வளாகத்தில் 15 இடங்களில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பக்தர்கள் ,கோவில் பணியாளர்கள் ,திரிசுதந்திரர்கள் மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் உள்பட அனைவரும் செல்போன் எடுத்து வர தடை வைதிக்கப்பட்டுள்ளது.மேலும் மக்கள் பாரம்பரிய உடையில் வருகின்றார்களாக என கண்காணிப்பதற்கு மகளிர் சுய உதவி குழுவினரை நியமிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து குருவாயூர் ,திருப்பதி ,மதுரை மீனாட்சி அம்மன் கோவில் என நாட்டின் பல்வேறு கோவில்களில் செல்போன் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் தற்போது திருச்செந்தூர் கோவிலிலும் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version