இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் உயர்ந்து கொண்டே வரும் நிலையில், தற்சமயம் அதன் புதிய விதமாக லிட்டர் ஒன்றுக்கு 92 ரூபாயை தாண்டி இருக்கிறது. பல நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 100 ரூபாயாக இருந்து வருகிறது. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார்கள். பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதற்காக மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இதுபோன்ற சூழ்நிலையில், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடையும் விதத்தில் ஒரு செய்தியை எச்டிஎஃப்சி வங்கி அதிரடியாக வெளியிட்டு இருக்கிறது. அதாவது 50 லிட்டர் வரையில் பெட்ரோல் முற்றிலுமாக இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்து இருக்கிறது. அதற்காக இந்தியன் ஆயில் கிரெடிட் கார்டு என்ற அட்டையை அந்த வங்கி வழங்கியிருக்கிறது.
அந்த அட்டையை பெறுவதற்கான அடிப்படை தகுதி என்பது ஒரு மாத ஊதியம் 12,000 ஆக இருக்க வேண்டும், அதோடு 21 வயது முதல் 60 வயதிற்குள் சுயதொழில் செய்பவர் 65 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதே சமயத்தில் இந்தியன் ஆயில் கிரெடிட் கார்டை பெறுவதற்காக எச்டிஎப்சி வங்கி கிளை அல்லது வங்கி இணையத்தில் விண்ணப்பம் செய்யலாம் இதை தவிர இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்குகளிலும் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அட்டையை பயன்படுத்தி சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களிலும் கட்டணம் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.