Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரயில் நிலையங்களை மேம்படுத்த ரூ 10 கோடி ஒதுக்கீடு:! மத்திய அரசு அசத்தல்!!

ரயில் நிலையங்களை மேம்படுத்த ரூ 10 கோடி ஒதுக்கீடு:! மத்திய அரசு அசத்தல்!!

நேற்று டெல்லியில் பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது.அதில் ரயில் நிலையங்களை மேம்படுத்தும் கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டது.இதைப் பற்றி மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் கூறியதவாறு:

இந்தியன் ரயில்வே சார்பில் மும்பை, டெல்லி, அகமதாபாத் ஆகிய மூன்று மாநிலங்களில் பழுதடைந்த ரயில் நிலையங்களை மேம்படுத்த வேண்டுமென்று முன்மொழிவு தாக்கல் செய்யப்பட்டது.இந்தியன் ரயில்வேயின் கோரிக்கைக்கு ஏற்ப பழுதடைந்த ரயில் நிலையங்களை மேம்படுத்த ரூபாய் 10 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இதன் மூலம் 34,744 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிட்டும் என்றும் மேலும் பயணிகளின் பயணம் அனுபவம் சிறப்பாக மேம்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version