மத்திய அரசு அதிரடி நடவடிக்கை! பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என தகவல்!

0
175
Central government action! Information that there is a security threat!

மத்திய அரசு அதிரடி நடவடிக்கை! பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என தகவல்!

மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்ப்பானந்தா சோனவால் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் சாகர் மாலா திட்டம் இந்திய துறைமுகங்களின் நவீனமாக்கும் முறை துறைமுகங்களை விரிவாக்கம் செய்யவும் அமல்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் 7500 கிலோ மீட்டர் தூரம் உள்ள கடலோர மாவட்டங்களை மேம்படுத்துவதற்காக 567 திட்டங்களை செயல்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.  மேலும் உள் கட்டமைப்பு தொழில்நுட்ப ரீதியான இந்த துறைமுகங்களை வலிமையாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றனர் எனவும் தெரிவித்தனர்.

மேலும் மதுரவாயில் மற்றும் சென்னை துறைமுகத்திற்கு இடையே இருக்கும் மேம்பால திட்டத்திற்கும் டெண்டர் அழிக்கப்பட்டுள்ளதாகவும் சீன உளவு கப்பலை இலங்கை அனுமதித்துள்ளதால் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலை தவிர்க்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தற்போது மேற்கொண்டு வருகிறது எனவும் கூறியிருந்தார். மேலும் இந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா போன்ற பகுதிகளில் துவங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.