சென்ற வருடம் தமிழகத்தில் பருவமழை அளவுக்கதிகமாக பெய்த காரணத்தால், தமிழ்நாடு வெள்ளக்காடானது தமிழ்நாடு முழுவதும் வெள்ளத்தில் சிக்கித் தவித்தது.அதிலும் தலைநகர் சென்னையை பற்றி கேட்கவே வேண்டாம் சென்னை என்னதான் சிங்காரச் சென்னை என்று அழைக்கப்பட்டாலும் கூட இந்த மழையின் நாட்கள் வந்தால் மட்டும் சென்னை வாழ் மக்கள் கடும் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது.
அந்தவகையில் சென்னையின் பல முக்கிய நகரங்கள் வெள்ளக்காடாக காட்சி அளித்தனர். இயந்திர மோட்டார்களை கொண்டு குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெள்ள நீரை வெளியேற்றும் பணி உள்ளிட்டவற்றை தமிழக அரசு செய்து வந்தது.அதோடு மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள பல முக்கிய அணைகள் நிரம்பி வழிந்தனர், ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
அதிலும் டெல்டா பகுதிகளில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள் டெல்டா பகுதிகளில் மட்டுமல்லாமல் இதர மாவட்டங்களிலும் விவசாயிகள் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். இதனால் விவசாயிகள் வருமானத்தை இழந்து தவித்து வந்தார்கள்.இதனால் மத்திய அரசு தமிழகத்திற்கு உடனடியாக வெள்ள நிவாரண நிதியை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆகவே டெல்லியிலிருந்து மத்திய குழு வந்து தமிழகம் முழுவதும் பார்வையிட்டது, அதோடு மத்திய குழுவின் அறிக்கையும் பிரதமர் முன்பு சமர்ப்பிக்கப்பட்டது.
ஆனால் இது நடந்து சற்றேறக்குறைய 6 மாதங்கள் முடிந்து விட்ட நிலையில், தற்சமயம் சென்ற வருடத்திற்கான பெரு வெள்ளம் மற்றும் நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் காரணமாக பாதிக்கப்பட்ட தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து கூடுதல் நிதி உதவி வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கி இருக்கிறது.
இதனடிப்படையில், அதிகபட்சமாக கர்நாடக மாநிலத்திற்கு 492.39 கோடி வழங்கப்படுகிறது. இதை தவிர ஆந்திர மாநிலத்திற்கு 351.43 கோடியும், மராட்டிய மாநிலத்திற்கு 355.39 கோடியும், தமிழ்நாட்டுக்கு 352.45 கொடியும், ஒதுக்கப்பட்டிருக்கிறது. மேலும் இமாச்சல பிரதேசத்திற்கு 112.19 கோடியும், புதுச்சேரிக்கு 17.86 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூடுதல் நிதி மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு மத்திய அரசால் ஏற்கனவே வழங்கப்பட்ட நிதிக்கு அப்பாற்பட்டது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. 2021 மற்றும் 2022 உள்ளிட்ட ஆண்டில் 28 மாநிலங்களுக்கு மாநில பேரிடர் நிதியத்திலிருந்து. 17,747.20 கொடியும், 8 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிதியத்திலிருந்து 4,645.92 கோடியும் வழங்கப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.