Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரஜினிக்கு மத்திய அரசின் சிறப்பு விருது: அரசியல் லாபத்திற்கா?

ரஜினிக்கு மத்திய அரசின் சிறப்பு விருது: அரசியல் லாபத்திற்கா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு மத்திய அரசு சிறப்பு விருதை ஒன்றை அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இன்று செய்தியாளர்களை சற்று முன் சந்தித்த மத்திய அரசின் தகவல் தொடர்புத் துறை மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் ’நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்நாள் சாதனைக்கான சிறப்பு விருது வழங்குவதாக அறிவித்தார், மேலும் இம்மாதம் கோவாவில் நடைபெறும் சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் அறிவித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்கி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். அவரை ஏற்கனவே பாஜகவின் ’பி’ டீம் என்று ஒரு சில அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில், ரஜினிகாந்துக்கு பாஜக அரசு அறிவித்துள்ள இந்த விருது அறிவிப்பு கூடுதல் சந்தேகத்தையும் ஏற்படுத்திவதாக ஒருசில அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது

இருப்பினும் இந்த விருதில் அரசியல் பின்னணி எதுவும் இல்லை என்றும் , கடந்த 44 ஆண்டுகளாக திரையுலகில் ரஜினி செய்த சாதனைக்காக கொடுக்கப்படுகிறது என்றும் மத்திய அரசு தரப்பில் இருந்து தெரிவித்து தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் ரஜினிகாந்த் தனக்கு அளிக்கப்பட்ட விருதுக்காக மத்திய அரசுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்

Exit mobile version