Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்தியாவில் விதிக்கப்பட்ட கொரோனா கட்டுபாடுகளை முழுவதுமாக விலக்க மத்திய அரசு முடிவு!

இந்தியாவில் விதிக்கப்பட்ட கொரோனா கட்டுபாடுகளை முழுவதுமாக விலக்க மத்திய அரசு முடிவு!

இந்தியாவில் நிலவி வந்த கொரோனா பரவலால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. எனவே கொரோனா தொற்றை கட்டுபடுத்த இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் கொரோனா கட்டுபாடுகளை விதித்தன. இதனிடையே இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பெருமளவு குறைந்து கொண்டு வருகிறது. மேலும் நாட்டில் நிலவி வந்த கொரோனா தொற்றின் மூன்றாவது அலையும் முடிவுக்கு வந்துள்ளது.

இதையடுத்து இந்தியாவில் விதிக்கப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாடுகளை முழுவதுமாக விலக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள அந்த கடிதத்தில்,

மாநில அரசுகள் விதித்துள்ள கொரோனா கட்டுபாட்டு விதிகளை இனி நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், எனவே கொரோனாவை கட்டுபடுத்த விதிக்கப்பட்ட கொரோனா கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் நீக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

கொரோனா கட்டுபாடுகளை முழுவதுமாக நீக்கினாலும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ள முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் மற்றும் கைகளை அடிக்கடி கழுவுதல் ஆகிய வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை, கொரோனா தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு சார்பில் விதிக்கப்பட்ட கொரோனா கட்டுபாடுகள் இந்த மாதம் (மார்ச்) 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே அதன் பிறகு புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version