2024 – 25 ஆம் ஆண்டுக்கான சமக்ரா ஷிக்ஷா திட்டத்தின் கீழ் தரப்பட வேண்டிய முதல் தவணை நிதியானது தமிழகத்திற்கு இன்னும் வழங்கப்படவில்லை என்றும் இந்த விஷயத்தில் மத்திய அரசன் மாணவர்களை வைத்து திட்டத்தின் மூலம் அரசியல் செய்கிறது என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் குற்றம் சாட்டியிருக்கிறார்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் தெரிவித்திருப்பதாவது :-
மத்திய அரசினுடைய தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பி எம் ஸ்ரீ திட்டத்தின் முழு விளக்கத்தையும் தன்னுடைய அறிக்கையில் வெளியிட்டு இருப்பதாக தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் சில மாநிலங்களுக்கு மட்டும் முதல்தவனை நிதி வழங்கப்பட்டிருப்பதாகவும் சில மாநிலங்களுக்கு இரண்டாவது தவணை நிலையம் வழங்கியிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இன்னும் சில மாநிலங்களுக்கு ஒரு தவணை நிதி மட்டுமே வழங்க முடிவு செய்து வழங்க இருப்பதாகவும் தெரிவித்ததோடு தமிழகத்திற்கு திட்டத்தின் கீழ் வழங்கப்படக்கூடிய முதல் தவணை கூட இன்னும் வழங்கப்படவில்லை என்றும் இதனால் தமிழக அரசு நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
பி எம் ஸ்ரீ திட்டமானது தேசிய கல்விக் கொள்கை திட்டத்தின் அனைத்து முதன்மை கருத்துக்களையும் ஒத்திருப்பதாகவும் இந்த திட்டத்தினை கட்டாயமாக தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று திணிக்கப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த திட்டத்தை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் தமிழகத்தில் மும்மொழி கல்விக் கொள்கையானது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் இத்திட்டத்தினை வைத்து அரசியல் செய்யாமல் தமிழகத்தில் உள்ள 40 லட்சம் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நிதியை வழங்குமாறும் கோரிக்கை வைப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.