முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்ய மத்திய செயற்குழு இன்று ஆயத்தம்

0
131

தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் கேரளா மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களில் ரெட்அலர்ட் விடப்பட்ட மழை அதிகமாக பெய்து வருகின்றது.இதநாள் நீர்வரத்தை அதிகமாகவே உள்ளது.இதனிடையே கம்மல் ஆற்றுப் பகுதியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணை திங்கட்கிழமை (10.8.20 20) நிலவரப்படி 136.25 அடியாக உயர்ந்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து 4825 கன அடியாகவும்,உபரி நீர் பாசனத்திற்காக 2100 கன அடி தண்ணீர் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.அணையின் நீர் இருப்பு 6181 மில்லியன் கனஅடியாக உள்ளது.காலை 8 மணி நிலவரப்படி பெரியாறு அணையில் 19 மி.மீ. , தேக்கடி ஏரியில் 9 மி.மீ, மழை பதிவாகியுள்ளது. நேற்று இரவுக்குள் அணையின் நீா்மட்டம் 137 அடியை எட்ட வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை பொறியாளா் ஒருவா் கருத்து தெரிவித்துள்ளாா்.

இதனால் தண்ணீர் தமிழகப் பகுதிக்கு அணையிலிருந்து வெளியேறும் தண்ணீா் லோயா்கேம்ப் மின்நிலையத்துக்குச் செல்லும் 4 குழாய்கள் வழியாக விநாடிக்கு 1,600 கன அடி திறந்து விடப்பட்டுள்ளது.

மின் நிலையத்தின் மூலம் தலா 42 மெகாவாட் வீதம் ,மொத்தம் 168 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. மேலும் லோயா்கேம்ப்-குமுளி மலைப் பாதையில் ,இரைச்சல் பாலம் வழியாகவும் 500 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

அணை நீர்மட்டம் அதிகரித்து அதிகரித்து வருவது பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய துணை குழு இன்று ஆய்வு செய்ய வருகிறது. இக்குழுவில் மத்திய நீராதார அமைப்பின் செயற்பொறியாளா் சரவணக்குமாரும், தமிழக அரசு தரப்பில் செயற்பொறியாளா் சாம் இா்வின், உதவி பொறியாளா் குமாா் இருவரும், கேரள அரசு தரப்பில் கட்டப்பனை பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் பினுபேபி, உதவி பொறியாளா் பிரசீத் ஆகியோா் இன்று கலந்து ஆலோசித்து ஆய்வு செய்ய வருகின்றனர்.