Cyber crime: சைபர் குற்றங்களில் பயன்படுத்தப்பட்ட 59 ஆயிரம் வாட்ஸ்-அப் கணக்குகளுக்கு தடை செய்ய மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் சைபர் குற்றங்கள் தொடர்பாக அதிக அளவில் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள். அதற்காகவே மத்திய அரசு முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாத்து கொள்ள தொலைக்காட்சி விளம்பரங்கள் மற்றும் தொலைபேசி வாயிலாக அறிவிப்பு என பல வழிமுறைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
அதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக சைபர் குற்றங்களில் பயன்படுத்தப்பட்ட 59 ஆயிரம் வாட்ஸ்-அப் கணக்குகளுக்குகளை முடக்க உள்ளதாக தகவல் வெளியிட்டு உள்ளது. மேலும் இது குறித்து மத்திய உள்துறை இணை மந்திரி பாண்டி சஞ்சய் குமார் மக்களவையில் பேசி இருக்கிறார். அதில் இதுவரை 9.94 லட்சத்துக்கு அதிகமான சைபர் குற்றச்சாட்டு வந்துள்ளது.
அதில் ரூ.3,431 கோடி மீட்கப்பட்டுள்ளது என்றார். மேலும் சைபர் குற்றத்திற்கு பயன்படுத்தப்பட 1,700 ஸ்கைப் ஐ.டி.க்கள் மற்றும் 59 ஆயிரம் வாட்ஸ்-அப் கணக்குகளுக்கு முடக்க உள்ளதாக அறிவித்தார். மேலும் இது போன்ற குற்றச் செயலில் ஈடுபடுவோர்கள் வாட்ஸ்அப் கணக்குக்கு லிங்குகளை அனுப்புவார்கள்.
அதன் பிறகு லிங்குக்கு உள்ளே செல்லும் போது வங்கி கணக்குடன் இணைப்பில் இருக்கும் தொலைபேசி எண் வாயிலாக பண மோசடியில் ஈடுபடுகிறார்கள்.மேலும் இந்த மோசடியில் ஈடுபடுவர்கள் தங்க வங்கி ஊழியர் போல பேசி வங்கி தொடர்பான விவரங்களை பெற்றுக் கொள்வார்கள் அதன் மூலமாகவும் மோசடிகள் நடைபெறுகிறது.