பதஞ்சலி நிறுவனத்தின் கொரோனில் என்ற ஆயுர்வேத மருந்துக்கு ஆயுஸ் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
கடந்த மாதம் 22 ஆம் தேதி அன்று பதஞ்சலி நிறுவனர் பாபா ராம் தேவ் இந்த மருந்தை அறிமுகப்படுத்தினார். மேலும் இந்த மருந்து குறித்து பல்வேறு கேள்விகள் மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்திலிருந்து எழுப்பப்பட்டது.மேலும் இந்த மருந்தின் விளம்பரத்தையும் தடை செய்தது.
இந்த கொரோனில் மருந்து கொரோனாவை குணப்படுத்த போவதில்லை.ஆனால் இந்த மருந்தை நோயாளிகள் எடுத்து கொண்ட போது நோயாளிகள் குணமாகி உள்ளதாக பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனர் பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து மத்திய அரசின் ஆயுஷ் அமைப்பு விதித்த நிபந்தனைகள்:
கொரோனில் என்ற பதஞ்சலி நிறுவன மருந்தை,எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊக்க மருந்தாக விற்பனை செய்து கொள்ளலாம்.மேலும் இந்த மருந்து கொரோனா தொற்றை குணப்படுத்தும் மருந்து என கூறி விற்பனை செய்யக்கூடாது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் நிபந்தனை விதித்துள்ளது.