மின்வாரிய துறையினை தனியார்மயமாக்கும் முயற்சியில் உள்ள மத்திய அரசினை எதிர்த்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
யூனியன் பிரதேசங்களில் மின்துறையிணை தனியார் மயமாக்குவது குறித்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டு இருந்தார். மின்சாரத் துறையினை யூனியன் பிரதேசங்களில் தனியார் மயமாக்க வேண்டும் என அவர் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், புதுவை அரசின் கருத்தினை கேட்காமல் தன்னிச்சையாகவே முடிவெடுத்து, அந்தத் திட்டத்தை செயல்படுத்துவது முறையில்லை என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருந்தார்.
இந்த மத்திய அரசின் மின்துறை தனியார்மயமாக்கல் குறித்து, புதுச்சேரி அரசு தனது சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. அதில் இந்த தனியார்மயமாக்கல் குறித்த முடிவுக்கு புதுச்சேரி அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது என அந்த தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தின் கோப்பினை புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடியின் மூலம் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் இதுகுறித்து, புதுச்சேரி அரசு மின்சாரத் துறையின் மூலம் ஏழை மக்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சலுகைகள் அனைத்தும், மின்வாரிய துறையினை தனியார் மயப்படுத்தும் போது ஏழை மக்களுக்கு கிடைக்கப் பெறாது, மேலும் மின் துறையில் உள்ள ஊழியர்களுக்கு பணி தொடர்பான பாதுகாப்புக்கு உறுதி இல்லாமல் போய்விடும் என்று மத்திய அரசிடம் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேசியுள்ளார்.
இந்த செயல்பாடுகளுக்கு இடையே, புதுச்சேரியில் மின்வாரியத் துறை ஊழியர்கள் மத்திய அரசின் இந்தத் திட்டத்தினை எதிர்த்து போராட்டம் நடக்கின்றது. இந்த போராட்டத்திற்கு அங்குள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவுடன் நடைபெற்று வருகின்றது. புதுச்சேரி அரசின் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம், மத்திய அரசின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தனியார்மயமாக்கும் முடிவினைக் கைவிடும்படி மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.