போட்ட திட்டமெல்லாம் வீணாப்போச்சே “அப்போ கேப்டனுக்கு பத்மபூஷன் இல்லையா”!! மோடியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கடந்த வருடம் டிசம்பர் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இவர் உயிரிழந்ததையடுத்து திரைத்துறை மற்றும் அரசியல்வாதிகள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்தனர்.அந்த வரிசையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் தனது இரங்கலை தெரிவித்தார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் இறுதி சடங்கிற்கு பிரதமர் மோடி வருவதாக பல தகவல்கள் வெளியானது.ஆனால் அதே நாளில் தான் ராமர் கோவில் திறப்பு என்பதால் வர முடியாமல் போய்விட்டது என்றும் பலர் கூறினர்.அதே போல மோடிக்கு விஜயகாந்த் என்றால் தனிப்பட்ட அலாதி பிரியம் என்பது அரசியல் வட்டாரங்களில் உள்ள அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
அதனால் தான் பாஜக தேமுதிகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வதில் ஆரம்பகட்டத்திலிருந்தே அதிக ஆர்வம் காட்டி வந்தது.அந்த வகையில் விஜயகாந்த் அவர்கள் இறப்பிற்கு பிறகு அவருக்கு கலைத்துறையில் சிறப்பாக சேவை புரிந்ததற்காக பத்மபூஷன் விருது வழங்கப்படும் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.
இதனால் கலைத்துறை என தொடங்கி தொண்டர்கள் முதல் அனைவரும் மகிழ்ச்சியடைந்ததோடு அந்நேரத்திற்காக காத்திருந்தனர்.தற்பொழுது நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வதில் இழுபறி நிலவி வந்ததில் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் என்று பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. பாஜகவும் தேமுதிகவுடன் கூட்டணி வைத்தால் கேப்டன் வாக்குகள் பல நம் பக்கம் வர வாய்ப்புள்ளது என்று எண்ணினர்.
ஆனால் அனைத்து எண்ணங்களும் வீணாகி போனது.பல இழுபறிகளைத் தாண்டி தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி வைத்தது.இந்த கூட்டணியானது தற்பொழுது நாடாளுமன்ற தேர்தலையும் கடந்துவிட்டது.இந்நிலையில் மத்திய அரசில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
இதில் தேமுதிக தலைவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படும் என பெருமளவு எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.பாஜக கூட்டணியில் தேமுதிக இல்லாததால் இந்த விருது நிராகரிக்கப்பட்டு விட்டதா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.