மத்திய அரசின் 20 ஆயிரம் கோடி நிதி.. இரண்டாக பிரியப்போகும் தமிழ்நாடு!! சேலம் தான் அடுத்த தலைநகரம்!!

0
417
Central government's 20 thousand crores fund.. Tamil Nadu will be divided into two!! Salem is the next capital!!

மத்திய அரசின் 20 ஆயிரம் கோடி நிதி.. இரண்டாக பிரியப்போகும் தமிழ்நாடு!! சேலம் தான் அடுத்த தலைநகரம்!!

மத்திய அரசானது இந்த வருடம் 48 லட்சத்திற்கு பட்ஜெட் தாக்கல் செய்தது. இதில் தமிழ்நாட்டிற்கு இன்று எந்த ஒரு நிதியும் பெரும்பான்மையாக ஒதுக்கப்படவில்லை. இது குறித்து எதிர்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டு தான் உள்ளது. இச்சமயத்தில் சேலம் மாவட்டத்திற்கு வந்த தமிழக பாஜக துணை தலைவர் கே பி ராமலிங்கம், பேசியது தற்பொழுது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, உலக நாடுகள் அனைத்தும் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளோம்.

கடந்த முறையை காட்டிலும் இம்முறை இந்தியா வளர்ச்சி பாதையில் முன்னோக்கி செல்கிறது. இம்முறை பட்ஜெட் தாக்கலில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என்று ஸ்டாலின் உள்ளிட்டோர் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் இதற்கு முன் நிதி ஒதுக்கிய பொழுது ஏன் ஸ்டாலின் வாய் திறக்கவில்லை. அதேபோல தற்பொழுது வரை மாநில அரசு கணக்கீடு சொல்லும் நிதி ஆயோக் கூட்டத்திற்கும் செல்லாதது ஏன்? தங்களுக்கு நிதி வேண்டுமன்றால் நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்று தங்களின் தேவைகளுக்கான திட்டங்களை விவரித்து கூறினால் தான் நிதி ஒதுக்க முடியும்.

இதனால் தமிழகமும் பயன்பெறும். இதனை தாண்டி ஆந்திரா தெலுங்கானா என இரு மாநிலங்களாக பிரிக்கப்பட்ட பொழுது ஆந்திரா தலைநகராக அமராவதியை தேர்ந்தெடுத்ததில் மத்திய அரசு 20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியது. இது தங்களின் தேர்தல் அறிக்கையிலும் கூறி இருந்தோம். அதற்கு வழிமொழிந்து அதனை  செயல்படுத்தியுள்ளோம். இதனைப் போலவே தமிழகத்தையும் இரண்டு மாநிலமாக பிரிக்கும் பட்சத்தில் 20 ஆயிரம் கோடி வாங்கி தர தயாராக உள்ளோம் என்று கூறினார்.

குறிப்பாக சேலத்தை தலைநகராக வைத்து மற்றொரு மாநிலத்தை உருவாக்க வேண்டும் இதற்கு ஸ்டாலின் தயாராக உள்ளாரா என்று கேள்வி எழுப்பினார். அவருக்கு ஒரு மகன் தானே மற்றொரு மாநிலம் வந்தால் அதற்கு வாரிசு இல்லை என்ற காரணத்தினால் தமிழகத்தில் மற்றொரு மாநிலம் உருவாக கட்டாயம் ஒப்புக்கொள்ள மாட்டார். அதுமட்டுமின்றி 234 தொகுதிகள் ஒரு மாநிலத்திற்கு இருப்பதைவிட அதனை இரண்டாக பிரித்து ஆட்சி செய்யும் பொழுது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.

அப்பொழுது சேலத்தை தலைநகராகக் கொண்டு மற்றொரு மாநிலத்தை உருவாக்கும் பட்சத்தில் மத்திய அரசிடமிருந்து 20 ஆயிரம் கோடி நிதி வாங்கி தர தயாராக உள்ளதாக பாஜக துணை தலைவர் பேசியது மக்களிடையே பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.