Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பெண்களுக்கு மட்டும் ரூ.5,00,000 கொடுக்கும் மத்திய அரசின் அட்டகாசமான திட்டம்!!

Central government's brilliant plan to give Rs.5,00,000 only to women!!

Central government's brilliant plan to give Rs.5,00,000 only to women!!

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெண்களின் பங்கு இன்றியமையாதது.இதை கருத்தில் கொண்டு மத்திய மற்றும் மாநில அரசு பெண்களின் நலனிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அந்த வகையில் பெண்கள் பொருளாதார ரீதியில் பிறரை சார்ந்திராமல் இருக்க சுயத் தொழில் மூலம் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த “லக்பதி திதி யோஜனா” திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்த “லக்பதி திதி யோஜனா” யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் தொழில் முனைவோராக மாற  வட்டி இல்லாமல் கடன் வழங்கப்படுகிறது.பெண்கள் பொருளாதார ரீதியில் வளர்ச்சி காண வைப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
கடந்த 2023 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் ரூ.5,00,000 வரை வடியில்லாமல் கடன் வழங்கப்படுகிறது.இதனால் கடனுதவி பெரும் பெண்கள் அசல் தொகையை மட்டும் செலுத்தினால் போதுமானது.
இத்திட்டத்தில் கடனுதவி பெற பெண்கள் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்க வேண்டும்.18 வயது முதல் 50 வயது வரை உள்ள மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.அதேபோல் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3,00,000க்கு கீழ் இருக்க வேண்டும்.
தேவைப்படும் ஆவணங்கள்:
1)ஆதார் அட்டை
2)பான் அட்டை
3)வாங்கி பாஸ்புக்
4)வருமானச் சான்று
5)மொபைல் எண்
6)சுய உதவிக்குழு ஆவணம்
இந்த ஆவணங்கள் அனைத்தும் தங்களிடம் இருக்க வேண்டும்.இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க அனைத்து தகுதிகளும் இருந்தால் லக்பதி யோஜனா இணையம் வாயிலாக உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம்.
Exit mobile version