கடந்த 2023 ஆம் ஆண்டு மகிளா சம்மான் என்ற சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு தொடங்கி வைத்தது.இது பெண்களின் சேமிப்பை ஊக்குவிக்கும் குறுகிய கால சேமிப்பு திட்டமாகும்.இந்த சேமிப்பு திட்டத்தின் முதிர்வு காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும். இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் ஆண்டிற்கு 7.5% வட்டி வழங்கப்படும்.
இந்திய பெண்கள் அனைவரும் இந்த திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கி முதலீடு செய்யலாம்.வங்கி அல்லது அஞ்சல் அலுவலகங்களில் மகிளா சம்மான் சேமிப்பு கணக்கு தொடங்க முடியும்.
இந்தியன் பேங்க்,எஸ்பிஐ,கனரா பேங்க்,சென்ட்ரல் பேங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட வங்கிகளில் இத்திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது.
இத்திட்டத்தின் குறைந்தபட்ச முதலீட்டு தொகை ரூ.1000 ஆகும்.அதேபோல் அதிகபட்ச முதலீட்டு தொகை ரூ.2,00,000 ஆகும்.நீங்கள் இத்திட்டத்தில் ரூ.2,00,000 முதலீடு செய்தீர்கள் என்றால் இரண்டு வருட முடிவில் வட்டியுடன் ரூ.2,32,044 கிடைக்கும்.
அதிக வட்டி மற்றும் பாதுகாப்பான முதலீட்டின் காரணமாக பலரும் இத்திட்டத்தில் கணக்கு தொடங்கி சேமித்து வருகின்றனர்.இத்திட்டத்தில் முதலீடு செய்ய வயது வரம்பு எதுவும் நிர்ணயிக்கபடவில்லை.
ஒரு வாடிக்கையாளர் எத்தனை கணக்கு வேண்டுமாலும் தொடங்கி முதலீடு செய்யலாம்.ஆனால் ஒவ்வொரு முதலீட்டிற்கு இடையே 3 மாத கால இடைவெளி இருக்க வேண்டியது அவசியம்.ஒவ்வொரு காலாண்டிற்கு ஒருமுறை வட்டி வரவு வைக்கப்படும்.
மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்திற்கான தகுதி:
1)இந்திய குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும்.
2)பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மட்டுமே இத்திட்டத்தில் விண்ணப்பிக்க முடியும்.
தேவைப்படும் ஆவணங்கள்:
ஆதார் கார்டு நகல்,பான் கார்டு நகல்,முகவரி சான்று,பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உள்ளிட்டவை வைத்து மகிளா சம்மான் கணக்கு தொடங்கி முதலீடு செய்யலாம்.