Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மத்திய அரசின் கடன் நிலுவை ரூ.100 லட்சம் கோடியை தாண்டியது..!! ஷாக் ரிப்போர்ட்!

இந்திய வரலாற்றில் முதன் முறையாக மத்திய அரசின் கடன் நிலுவை தொகை ரூ.100 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.

மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசின் கடன் நிலுவை தொகை படிப்படியாக உயர்ந்து வந்திருப்பதும், அது முதல் காலாண்டில் 7 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்திருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த கொரோனா சூழலினால் அதிக அளவு மத்திய அரசு கடன் வாங்கியுள்ளது. அதன் காரணமாகவே மொத்த கடன் அளவு 100 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. ஐ.எம்.எப். தரவுகளின் படி தற்போதைய கடன் அளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 43% ஆக உள்ளது. இது வரும் 2021 நிதி ஆண்டின் இறுதியில் அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60% தொடும் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆனால் கடந்த 2017ஆம் ஆண்டில், பொதுக்கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40% குறைவாகவே இருக்க வேண்டும் என்று நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் வேளாண்மை விதிகள் பரிந்துரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்றால் அனைத்து நாட்டின் நிதி நிலைகளும் மோசமாக பாதித்துள்ளது. அதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல.

Exit mobile version