தமிழகத்திற்கு மத்திய அரசு 7504 கோடி ரூபாய் கடனுதவி
தமிழகத்தில் சமீப காலமாக அறிவிக்கப்படாத மின்வெட்டு பல்வேறு இடங்களில் ஏற்பட்டு வருகிறது.இதற்கான காரணங்களை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் அவ்வப்போது விளக்கி வருகிறார்.
இந்நிலையில் தான் தமிழகத்தில் இருக்கு மின்வெட்டை சரி செய்யவும், சீராக மின் வினியோக திட்ட பணிகளை மேற்கொள்ளவும், மத்திய அரசு 7,504 கோடி ரூபாய் கடன் வழங்க அனுமதி அளித்துள்ளது.
குறிப்பாக தமிழகம் உட்பட பல்வேறு மாநில மின் வாரியங்கள் நிதி நெருக்கடியில் இருக்கின்றன. இதனால் மின் விநியோகத்தில் சீரற்ற நிலை நிலவி வருகிறது.இந்நிலையில் மத்திய அரசு, மின் வினியோக சீர்திருத்த திட்டங்களுக்காக, தமிழகம், ஆந்திரா, உத்திர பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு சுமார் 28 ஆயிரத்து 204 கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
இதில் தமிழகத்திற்கு 7,504 கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய அரசு வழங்கும் இந்த நிதியில், சீராக மின் வினியோகம் செய்வது, மின் இழப்பை குறைப்பது உள்ளிட்ட திட்ட பணிகளை மேற்கொள்ள, மின் வாரியம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.