இணையவழி சூதாட்டங்களுக்கு மத்திய அரசே தடை விதிப்பு : அதிகாரி விளக்கம்!

0
147
#image_title
இணையவழி சூதாட்டங்களுக்கு மத்திய அரசே தடை விதிப்பு : அதிகாரி விளக்கம்
இணையவழி சூதாட்டங்களுக்கு மத்திய அரசே தடை விதித்துள்ளதாக மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் விளக்கம் அளித்துள்ளார்.
இணையவழி விளையாட்டுகளுக்கான புதிய விதிகளை மத்திய அரசு அண்மையில் வெளியிட்டது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங் கள் இணையவழி குதாட்டங்களுக்குத் தடை விதித்து பேரவையில் சட்டத்தை இயற்றியுள்ளன. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கூடுதல் சொலிசிட்டர் ஜென ரல் என்.வெங்கட்ராமன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இணையவழி விளையாட்டுகள் தொடர்பான மத்திய அரசின் புதிய விதிகள் தெளிவாக உள்ளன. அதில் எந்தவிதத் தெளிவின்மையும் காணப்படவில்லை. பந்தயம் வைத்து விளையாடும் இணையவழி விளையாட்டுகளுக்குப் புதிய விதிகள் தடை விதிக்கின்றன என்று தெரிவித்தார்.
மேலும், அதுசார்ந்த விளையாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவில் அனுமதி கிடையாது. கணிப்பின் அடிப்படையிலும் நிச்சயமில்லாத சூழலிலும் பணத்தை பந்தயமாக வைத்து விளையாடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பரிசை அடிப்படையாகக் கொண்ட இணையவழி விளையாட்டுகளை பதிவு செய்து கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டார்.
சில நிறுவனங்கள் இந்தியாவில் பந்தயத்தை அடிப்படையாகக் கொண்ட இணையவழி விளையாட் டுகளை திறன் சார்ந்தவை. வாய்ப்பு சார்ந்தவை என வகைப்படுத்தி சில மாநிலங்கள் தவறிழைக்கின்றன. அரசமைப்புச் சட்டம், சட்ட விதிகள், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மாநிலங்கள் இந்த விவகாரத்தில் சட்டமியற்ற வேண்டும் என்றும் கூறினார்
 பந்தயத்தை அடிப்படையாகக் கொண்ட விளையாட்டுகளைத் திறன் சார்ந்தவை,வாய்ப்பு சார்ந்தவை எனப் பிரித்து சில நிறுவனங்கள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன. இரு வகைகளிலும் பந்தயம் கட்டி. விளையாடுவது சட்டப்படி அனுமதிக்கத்தக்கது அல்ல. எவையெல்லாம் பந்தய விளையாட்டுகள் என்பதை உச்சநீதிமன்றம் 1957 முதல் 1995 வரை பல்வேறு தீர்ப்புகளில் விளக்கியுள்ளது.
அவற்றை அடிப்படையாகக் கொண்டு மாநிலங்கள் சட்டமியற்ற வேண்டும். திறன் சார்ந்த விளையாட்டுகளுக்குத் தடையில் இருந்து மாநிலங்கள் விலக்கு அளிக்கக் கூடாது” என்றும் திட்டவட்டமாக மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.