இன்று தாக்கலாகும் மத்திய நிதிநிலை அறிக்கை! 5 மாநில சட்டசபை தேர்தல் எதிரொலி இருக்குமா?

0
160

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் 2 கட்டங்களாக நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது 5 மாநில சட்டசபை தேர்தல் நடைபெறவிருப்பதால் 2 கட்டங்களாக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவிருக்கிறது. முதல் கூட்டத்தொடர் இன்றைய தினம் தொடங்கி பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி வரை நடைபெறயிருக்கிறது. அடுத்த கட்ட கூட்டத்தொடர் மார்ச் மாதம் 14 ஆம் தேதி ஆரம்பித்து ஏப்ரல் மாதம் 8ம் தேதி வரையிலும் நடைபெறயிருக்கிறது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமானது முதலில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றியிருக்கிறார்.

இந்நிலையில், 2022- 2023 உள்ளிட்ட நிதியாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படயிருக்கிறது. நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யவிருக்கிறார். 2வது முறையாக காகிதம் இல்லாத டிஜிட்டல் நிதிநிலை அறிக்கையை அவர் இன்று தாக்கல் செய்யயிருக்கிறார்.

நிதிநிலை அறிக்கையின் அம்சங்கள் உள்ளிட்டவற்றை Union budjet என்ற செயலின் மூலமாக அறிந்துகொள்ள முடியும். 5 மாநில சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதன் காரணமாக, இந்த பட்ஜெட்டில் வாக்காளர்களை கவரும் விதமாக கவர்ச்சியான அறிவிப்பு இடம்பெறுவதற்கான வாய்ப்பிருக்கிறது என்று எல்லோராலும் தெரிவிக்கப்படுகிறது.