Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஏர் இந்தியாவை முழுமையாக விற்க மத்திய அரசு முடிவு: எதிர்க்கும் பாஜக எம்பி

ஏர் இந்தியா விமான நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்குவதாக கூறப்பட்டாலும் மத்திய அரசு எடுத்த நடவடிக்கையின் அடிப்படையில் கடந்த சில மாதங்களாக லாபத்தில் இயங்கி வருவதாக கூறபடுகிறது.

இந்த நிலையில் திடீரென மத்திய பாஜக அரசு ஏர் இந்தியா விமான நிறுவனத்தை முழுவதுமாக அதாவது 100 சதவீத பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு பாஜகவின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்பியுமான சுப்பிரமணியம் சாமி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு ரூபாய் 50,000 கோடி கடன் இருப்பதால் தொடர்ந்து இந்நிறுவனம் நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும் அதனால் இந்த நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்க விரும்புபவர்கள் மார்ச் 17-ஆம் தேதிக்குள் மத்திய அரசிடம் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்நிறுவனத்தின் 70 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முன்வந்தபோது அதனை யாரும் வாங்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தான் தற்போது 100 சதவீத பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது என்பதும் இந்த முடிவிற்கு சமீபத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மத்திய அரசின் இந்த முடிவிற்கு பாஜகவின் மாநிலங்களவை எம்பி சுப்பிரமணியசாமி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘ஏர் இந்தியாவின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது தேச விரோத நடவடிக்கை என்றும் இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் செல்ல இருப்பதாகவும் அவர் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version