மத்திய அரசின் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!! விண்ணப்பம் செய்ய செப்டம்பர் 15 இறுதி நாள்!
மத்திய அரசின் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது.அதன்படி காலியாக உள்ள 01 Junior Research Fellow பணிக்கான தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் செப்டம்பர் 15 வரை ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது.
வேலை வகை: மத்திய அரசு பணி
நிறுவனம்: National Institute of Pathology (ICMR)
பணி: Junior Research Fellow
காலியிடங்கள்: Junior Research Fellow பதவிக்கு ஒரு காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் முதுகலை பட்டத்துடன் NET / GATE
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மாத ஊதியம்: Junior Research Fellow பதவிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம்
ரூ.31,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் முறை
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி
Junior Research Fellow பணிக்கு தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் main.icmr.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி தேதி: Junior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்க 15-09-2023 கடைசி தேதி ஆகும்.