மீண்டும் சேர்ந்த சைந்தவி மற்றும் ஜி.வி பிரகாஷ் ஜோடி!! ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சி!!

0
212
Chaindavi and GV Prakash reunited!! Joy among the fans!!

மீண்டும் சேர்ந்த சைந்தவி மற்றும் ஜி.வி பிரகாஷ் ஜோடி!! ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சி!!

பசங்க படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விமல்.இதில் மிகவும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.இவரது நடிப்பில் தற்பொழுது புது படம் ஒன்று வெளியாகவுள்ளது.இந்த படத்தை நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட் அவர்கள் இயக்கியுள்ளார்,மேலும் இந்த படத்தை எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், வெற்றிமாறனின் திரைப்பட நிறுவனமான கிராஸ் ரூட் நிறுவனம் சேர்ந்து வழங்க உள்ளது.

இந்த படத்தின் பெயர் முதலில் மா.பொ.சி என்று குறிப்படப்பட்டு இருந்தது.ஆனால் அதற்கு பல எதிர்ப்புகள் கிளம்பியதால் படத்தின் தலைப்பினை ‘சார்’ என்று மாற்றினர்.கிராமத்தில் வசிக்கும் மக்கள், கடவுளின் பெயரை சொல்லி ஊரில் உள்ள மாணவர்களை படிக்க விடாமல் தடுக்கிறார்கள்,இதனை எதிர்த்து போராடும் ஆசிரியர் சம்பந்தமான கதைக்களம் திரைப்படமாக்கப்பட்டுள்ளது .

இந்த படம் விரைவில் தியேட்டர்களில் வர இருக்கிறது.படத்தில் இடம் பெற்றுள்ள பனங்கருக்கா என்னும் பாடலை ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஜோடி சேர்ந்து படியதாக தகவல் வெளிவந்துள்ளது .இவர்கள் இருவரும் தற்பொழுது பிரிந்து வாழும் நிலையில் எப்படி ஒன்றாக பாடினார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழத் தொடங்கியுள்ளது.

ஜோடிகள் பிரிவதற்கு முன்பே இந்த பாடல் பாடப்பட்டது என படக்குழுவினர் தரப்பில் கூறப்படுகிறது. ரசிகர்கள் இவர்களது குரலில் மீண்டும் பாடலை கேட்க ஆர்வமாக உள்ளனர்.