திமுக-வுக்கு சவால்.. இது மட்டும் உண்மை இல்லை என்றால் அடுத்த கணமே அரசியலை விட்டு விலகுகிறேன் – அண்ணாமலை ஆவேசம்!!
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அவரது அமைச்சர்களால் முதல்வர் பல சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளும் நிலையில் தற்பொழுது வீடியோ மூலம் அடுத்தடுத்து மாட்டிக் கொள்கின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் டி ஆர் பாலு பல நூறு வருட பழமையான கோவில்களை இடித்ததாக பெருமையாக பேசிய வீடியோ சற்று சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இவர் எவ்வாறு இப்படி பேசலாம் என பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனையடுத்து சேலம் திருமலகிரி பகுதியில் திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம் பட்டியலின இளைஞன் ஒருவன் கோவிலுக்குள் நுழைந்ததை யொட்டி, அந்த இளைஞனை நிற்க வைத்து மிகவும் கொச்சையாக பேசிய வீடியோவும் நேற்று வைரலானது. இதனையும் பாஜக பெருமளவு கண்டித்ததை அடுத்து கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை இது குறித்து கூறியுள்ளார்.
அதில், கோவில் இடிப்பு சம்பந்தமாக டி ஆர் பாலு பேசிய வீடியோவை தடையவியல் துறை சோதனை செய்து இதை எடிட் செய்யப்பட்டது என்று கூறினால் நான் அப்பொழுதே அரசியலை விட்டு விலகுவேன் என தெரிவித்தார். அதேபோல தற்பொழுது நடைபெறப்போகும் இடைத்தேர்தலில் பணம் பட்டுவாடா செய்யப் போவதாக கே என் நேரு மற்றும் வேட்பாளர் இ வி கே எஸ் பேசிய வீடியோவும் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க உள்ளோம். இந்த வீடியோ சித்தரிக்கப்பட்டது என உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு நிரூபித்தால் நான் அடுத்த கனமே அரசியலை விட்டு விலகுகிறேன் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இது அனைத்தும் பொதுமக்கள் மத்தியில் நேரடியாக நடந்தது என்பதால் இதனை மாற்ற இயலாது எனவே இது உண்மை என நிரூபிக்க அண்ணாமலை இவாறான சவாலை விட்டு வருகிறார்.