Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வெள்ளத்தில் மிதக்கும் சீர்காழி-சம்பா பயிர் சேதமால் விவசாயிகள் வேதனை!!

chamba-crops-are-submerged-in-flood-water-due-to-continuous-rain

chamba-crops-are-submerged-in-flood-water-due-to-continuous-rainchamba-crops-are-submerged-in-flood-water-due-to-continuous-rain

வெள்ளத்தில் மிதக்கும் சீர்காழி-சம்பா பயிர் சேதமால் விவசாயிகள் வேதனை!!

தென்மேற்கு வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வரும் நிலையில் டெல்டா மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களகா பெய்து வரும் மழையால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கொள்ளிடம் ,சிதம்பரம் போன்ற பகுதியில் 30 சென்டிமீட்டர் மேல் மழை பதிவாகி உள்ளது. இதனால் அப்பகுதியல் பயிரிடப்பட்ட சம்பா பையிர்கள் பெறும் அளவில் சேதம் அடைந்துள்ளது.செம்பனார்கோவில் ,பொறையார், மயிலாடுதுறை பகுதியில் 16 சென்டிமீட்டர் முதல் 25 சென்டிமீட்டர் வரை மழை பதிவாகியுள்ளது.

குறிப்பாக சீர்காழியில் அதிகப்படியாக 43 சென்டிமீட்டராக மழை பதிவாகியுள்ளது. இதன் காராணமாக அப்பகுதில் 30,000-திற்கு மேலான ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார்கள்.

இதனால் அப்பகுதி விவசாயிகள் பதிக்கப்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளார்கள்.தமிழகஅரசு பயிர் சாகுபடி கடன் தள்ளுபடி செய்ய கோரிக்கை வைத்துள்ளார்கள் மற்றும் உரிய இழப்பீடு வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளார்கள் .

Exit mobile version