விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும் சாமை!!! இதில் ஊத்தப்பம் செய்வது எப்படி!!!

0
71
#image_title

விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும் சாமை!!! இதில் ஊத்தப்பம் செய்வது எப்படி!!!

சிறுதானிய வகைகளில் ஒன்றான சாமையை பயன்படுத்தும் பொழுது நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றியும் இதை பயன்படுத்தி ஊத்தாப்பம் செய்வது எவ்வாறு என்பது பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தானிய வகைகளில் ஒன்றான சாமை அரிசியானது இந்தியாவில் அதிகம் விளைவிக்கப்பட்டு வருகின்றது. இந்த சாமை அரிசியை சாப்பிடும் பொழுது உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கின்றது. இதில் மாவு அரைத்து ஊத்தாப்பம் செய்வது பற்றியும் இதன் நன்மைகள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

சாமையில் புரதச்சத்து, சோடியம், தாது உப்புகள், இரும்புச் சத்து, மெக்னீசியம், கொழுப்புச் சத்து, காப்பர், நார்ச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், பொட்டாசியம் போன்ற பல சத்துக்கள் அடங்கியுள்ளது. சாமையின் நன்மைகள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

சாமையின் நன்மைகள்!!!

* சாமையில் கால்சியம் சத்துக்கள் இருப்பதால் இது நம் உடலுக்கு வலிமையை கொடுக்கின்றது. எலும்புகளுக்கு வலிமை அளிக்கின்றது.

* சாமை அரிசியை ஆண்கள் எடுத்துக் கொள்வதால் ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி அதிகரிக்கும். மலட்டுத் தன்மை சரியாகும். ஆண்மை தன்மை அதிகரிக்கும்.

* சாமை அரிசியில் சாதாரண அரிசியை விட 7 மடங்கு நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இதனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாமை அரிசியை சாப்பிடும் பொழுது சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கலாம்.

* இதில் இரும்புச் சத்து அதிகம் இருக்கின்றது. இதனால் சாமை அரிசி சாப்பிடுவதால் இரத்த சோகை நோயை குணப்படுத்தலாம்.

* சாமை அரிசியை சாப்பிடும் பொழுது மலச்சிக்கல் பிரச்சனை சரியாகின்றது.

* சாமை அரிசியை சாப்பிடுவதால் மாரடைப்பு வராமல் தடுக்கலாம்.

இந்த சாமையை பயன்படுத்தி சாமை முறுக்கு, சாமை சோறு, சாமை இடியாப்பம், சாமை கேக், சாமை புட்டு, சாமை பிஸ்கட் போன்று பல வகையான உணவுகளை சமைத்து சாப்பிடலாம். தற்பொழுது சாமை உத்தாப்பம் எவ்வாறு தயார் செய்வது என்று பார்க்கலாம்.

சாமை ஊத்தாப்பம் செய்ய தேவையான பொருட்கள்…

* சாமை – 100 கிராம்
* பச்சரிசி – 2 டேபிள் ஸ்பூன்
* ஜவ்வரிசி – 2 டேபிள் ஸ்பூன்
* உளுந்து – 25 கிராம்
* எண்ணெய் – தேவையான அளவு
* பெரிய வெங்காயம் – 1(பொடியாக நறுக்கியது)
* கேரட் – 1 நறுக்கியது
* தக்காளி – 1 நறுக்கியது
* கொத்தமல்லி தழை – சிறிதளவு நறுக்கியது
* பச்சை மிளகாய் – 1 நறுக்கியது
* பொடித்த முந்திரி – 25 கிராம்
* ஊற வைத்த கடலை பருப்பு – 2 டீஸ்பூன்

செய்முறை…

மேற்குறிப்பிட்ட அளவு சாமை, பச்சரிசி, ஜவ்வரிசி, உளுந்து ஆகிய நான்கையும் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதை நான்கையும் சேர்த்து ஊறவைத்து மாவாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு வெங்காயம், கேரட், பச்சை மிளகாய், கடலை பருப்பு, முந்திரி பருப்பு, தக்காளி, கொத்தமல்லி தழை இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பை பற்ற வைத்து தோசைக் கல்லை வைத்து சூடாக்கி கொள்ள வேண்டும். கல் சூடான பிறகு எண்ணெய் தடவி மாவை தடிமனாக ஊற்ற வேண்டும். பின்னர் கலந்து வைத்துள்ள பொருட்களை தோசை மீது தூவி இரண்டு பக்கமும் வேக வைத்து எடுத்தால் சுவையான சாமை ஊத்தாப்பம் தயார்.