சென்னை: தமிழகத்தில் கடந்த 1 மாதம் காலமாக பல மாவட்டங்களில் கனத்தமழை முதல் வெள்ளம் வரை மழை பெய்து வருகிறது. அதன்படி இன்று வடதமிழக கடலோரப் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை பகுதி இன்று அதே இடத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிலக்ககூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த வலுவிழப்பு காரணமாக இன்று முதல் 30-ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் அதிக இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக இன்று மாலை 5 மணி வரை 5 மாவட்டகளில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த 5 மாவட்டங்கள் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இன்று காலை முதல் சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் லேசான மழை விட்டு விட்டு பொழிந்தது வருகிறது.