சென்னை வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கு விடுத்த கடுமையான எச்சரிக்கை!

0
127

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்த நாளிலிருந்தே பரவலாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது, அதன் ஒரு பகுதியாக வங்கக் கடலில் உருவாகி இருக்கக்கூடிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் தேதி வரையில் தமிழ்நாட்டில் அநேக பகுதிகளில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

அதன் அடிப்படையில், இன்றைய தினம் தூத்துக்குடி,திருநெல்வேலி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் ராமநாதபுரம், காரைக்கால், உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழையும், தென்மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்கள் அதோடு புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

நாளைய தினம் மற்றும் நாளை மறுதினம் உள்ளிட்ட தினங்களில் தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் அதோடு மற்ற மாவட்டங்களில் அனேக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என சொல்லப்பட்டுள்ளது.

அதோடு எதிர்வரும் 31ஆம் தேதி கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை, மற்ற மாவட்டங்களில் அனேக பகுதிகளில் மிதமான மழையும், பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

தென்மேற்கு வங்க கடல் மற்றும் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பேசுவதற்கான வாய்ப்பு இருக்கிறது, ஆகவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது.