இன்று, நாளை கனமழைக்கு வாய்ப்பு!! வானிலை ஆய்வு மையம் தகவல்!!

0
185
Chance of heavy rain today and tomorrow!! Meteorological Center Information!!

சென்னை: தென்மேற்கு மற்றும் அதில் ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது சென்னைக்கு கிழக்கில்  மையம் கொண்டுள்ளது. இன்றும், நாளையும் தொடர்ந்து வட கிழக்கு திசையில் நகரக்கூடுமென கணிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து ஒன்பது துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி  சென்னை, கடலூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி, ஒன்றாம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. கனமழை ஒரு சில இடங்களில் அதாவது  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இன்று மதியம் 2 மணி வரை சேலம், நாமக்கல், தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.