பங்குனி மாதம் தொடங்கியதிலிருந்து தமிழகத்தில் பல்வேறு வழிகளில் வெயில் சுட்டெரித்து வந்தது.மாசி மாதம் பிற்பகுதியிலேயே வெயில் தன்னுடைய உக்கிரத்தை காட்ட தொடங்கி விட்டது.
இந்த நிலையில், பங்குனி மாதம் முழுவதும் கடுமையான வெயில் அடிக்கத் தொடங்கியது.இதனால் விவசாயம் பெருமளவு பாதிக்கப்பட்டது. விவசாய கூலி வேலைக்கு செல்பவர்கள், கட்டிட வேலைக்கு செல்பவர்கள் உள்ளிட்டோர் கடுமையான பாதிப்பை சந்தித்தார்கள்.
அதோடு புவி வெப்பமயமாதல் அதிகரித்து வருவதால் கடல் மட்டம் உயர்வதற்கான வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்த விஞ்ஞானிகள் கடல் மட்டம் உயர்ந்தால் சென்னையின் ஒரு முக்கிய பகுதி கடலுக்குள் முழுகுவதற்கான அபாயமிருப்பதாக தெரிவித்தார்கள்.
இந்த நிலையில், தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய தமிழக வட இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, எதிர்வரும் வியாழக்கிழமை வரை தமிழ்நாட்டில் ஒரு பகுதிகளில் மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இதனால் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் உட்பட ஒரு சில பகுதிகளில் கன மழை புரட்டி எடுத்து வருகிறது. கடந்த சில தினங்களாக வெயில் கடுமையாக காணப்பட்ட நிலையில், இந்த திடீர் மழையின் காரணமாக, சில பகுதிகளில் வெப்ப நிலை சற்றே குறைந்திருக்கிறது. ஆகவே தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
ராமநாதபுரம், புதுக்கோட்டை. அரியலூர், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.