Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததிலிருந்து பரவலாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது, பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு உண்டானது இந்த சூழ்நிலையில், இந்த மாத தொடக்கத்தில் இருந்து மழை சற்று குறைய ஆரம்பித்துள்ளது.

அதன்படி இன்றைய தினம் தென் மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அவற்றை ஒட்டி இருக்கக் கூடிய உள் மாவட்டங்கள் ஆன திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கரூர், உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும், நாளை தென் கடலோர மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழையும், பெய்ய வாய்ப்பிருக்கிறது இதை தவிர பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலவிவந்த புயல் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து இருந்த சூழ்நிலையில், அது மேலும் வலு குறைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஒடிசா கடற்கரை ஓரமாக நிலைகொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.

நேற்று 8:30 யுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் கொடுமுடி, அணைப்பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் தலா 5 சென்டி மீட்டர் மழையும், கோயம்புத்தூர் பகுதியில் 7 செண்டி மீட்டர் வரையும், எட்டையபுரம் பகுதியில் 6 சென்டி மீட்டர் மழையும், நாங்குநேரி மற்றும் மோகனூர், வெம்பக்கோட்டை, சின்னக்கல்லார், உள்ளிட்ட பகுதிகளில் தலா 5 சென்டிமீட்டர் வரையும் பஞ்சப்பட்டி, பூதப்பாண்டி, வீரபாண்டி, சிவகாசி, உடுமலைப்பேட்டை, உள்ளிட்ட பகுதிகளில் தலா 4 சென்டிமீட்டர் உட்பட ஒரு சில பகுதிகளில் மழை பெய்து இருக்கிறது.

Exit mobile version