அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மூன்று மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

0
191
#image_title

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மூன்று மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதம் இறுதி வரை வெளுத்து வாங்கியது. இதனிடையே நவம்பர் மாதம் 26 அன்று தமிழகத்தின் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயல் இந்த மாதம் 5 ஆம் தேதி ஆந்திரா அருகே கரையை கடந்தது. இந்த புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்தது. தொடர் கனமழையால் இந்த மாவட்டங்களில் வெள்ள நீர் சூழுந்து கொண்டது. இந்த வெள்ள நீரை கடல் உள்வாங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி போனது.

தற்பொழுது வெள்ள நீர் வடிந்து இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பி வரும் நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 3 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. அதன்படி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய 3 மாவட்டங்களின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.