Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்று பகல் 1 மணிக்குள் இந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

Chance of rain in these districts by 1 PM today - Chennai Meteorological Department Announcement!!

Chance of rain in these districts by 1 PM today - Chennai Meteorological Department Announcement!!

இன்று பகல் 1 மணிக்குள் இந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

தமிழகத்தில் ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது.வட தமிழகத்தில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்து வருகிறது.கடுமையான வெயில் தாக்கத்தால் நீர் நிலைகள் வற்றி தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது.

வெயிலால் ஏற்படும் நோய் தாக்கம் மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் முதியவர்கள் கலக்கத்தில் இருக்கின்றனர்.இந்த வருடம் போதிய மழை இல்லாத காரணத்தினால் பயிர்கள் கருகி வருகிறது என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் சுட்டெரிக்கும் வெயிலை தணிக்க இன்னும் சில மணி நேரத்தில் தென் தமிழகத்தின் கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டி இருக்கும் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் கன்னியாகுமரி,நெல்லை மற்றும் இராமநாதபுரத்தில் இன்று பகல் 1 மணிக்குள் மழை பெய்யக் கூடும் என்று தெரிவித்து இருக்கிறது.

மேலும் மே 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி,நெல்லையில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும் என்றும் இதர மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

Exit mobile version