இந்த மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!!
அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
தமிழக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. மேலும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து நாளை முதல் நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தை பொறுத்த வரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து இன்று வரை பெய்துள்ள மொத்த மழையின் அளவு 32.2மில்லி மீட்டர், அதில் அதிகபட்சமாக நாகபட்டினத்தில் 128.6 மில்லி மீட்டராகவும், குறைந்தபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 1.1 மில்லி மீட்டராகவும் மழை பதிவாகி உள்ளது.