இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

0
193
Chance of rain with thunder and lightning! In which areas do you know the information published by the Meteorological Department!

இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர்.

மேலும் தமிழகத்தில் மயிலாடு துறை மாவட்டத்தில் சீர்காழி பகுதியில் 122 ஆண்டுகளுக்கு இல்லாத அளவில் 6 மணி நேரத்தில் 42 செ.மீ அளவில் கனமழை கொட்டி தீர்த்தது.அதனால் சீர்காழி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.

மேலும் அந்த பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிப்படைந்தது.இந்நிலையில் தற்போது தான் மழை நீர் அனைத்தும் சரிசெய்யப்பட்டு பள்ளி மற்றும் கல்லூரிகள் ,என அனைத்தும் வழக்கம் போல செயல் பட தொடங்கி மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கேரளா கடலோரப்பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு ,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளனர்.

அதனையடுத்து 26 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை தமிழ்நாடு ,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில்  லேசானது முதல் மிதமான மழை இடி மின்னலுடன் பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.