Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்திய மற்றும் சீன எல்லையில் போருக்கான பதற்றம்

India vs China-News4 Tamil Online Tamil News

India vs China-News4 Tamil Online Tamil News

லடாக் எல்லையில் சீனா – இந்தியா இடையே போர்கான சூழல் உள்ள நிலையில் எல்லையில் சாலை பணிகளை தொடர இந்தியா முடிவு செய்துள்ளது.

இந்தியா – சீனா எல்லைப்பகுதிகளான அருணாச்சல பிரதேசம் மற்றும் லடாக் மீது அடிக்கடி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருகிறது சீனா. கடந்த ஆண்டு லடாக் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டபோது சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கிழக்கு லடாக்கின் பங்காங் சோ ஏரிப்பகுதி அருகே இந்தியா முக்கியமான சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கிலும் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

இதற்கு சீனா கடும் எதிர்ப்பை தெரிவித்த நிலையில், கடந்த 5ம் தேதி சீனா இராணுவத்திற்கும், இந்திய இராணுவத்திற்கும் இடையே தாக்குதல் நடந்தது

எல்லைப்பகுதியில் கற்களை வீசி அவர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். பின்னர் 9ம் தேதி சிக்கிம் பகுதியிலும் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் எழுந்தது. அதை தொடர்ந்து இரு நாடுகளும் எல்லையில் தங்கள் இராணுவ பலத்தை அதிகப்படுத்தியுள்ளது.

இந்த பிரச்சினைக்கு காரணமான சாலை பணிகளை முழுவதுமாக முடிக்காமல் விடுவதில்லை என இந்தியா தீர்க்கமாக இருக்கிறது. லடாக், சிக்கிம், அருணாச்சல் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் எல்லைப்பகுதிகளில் நடைபெறும் கட்டமைப்பு பணிகளில் எந்த தொய்வும் இன்றி பணிகளை துரிதமாக மேற்கொள்ள ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளதாக அரசு வட்டாரங்களில் பேசி கொள்ளப்படுகின்றன.

இடையே இன்று பிரதமர் மோடி அவர்கள் அவசரகால ஆலோசனையை நடத்தவுள்ளார்.

இதற்கு இடையில் எல்லையில் படைகளை குவித்து போருக்கு தயாராக இருக்கும்படி சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

Exit mobile version