சந்திரபாபு நாயுடு கைது எதிரொலி!!! ஆந்திர மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்!!!

0
104
#image_title

சந்திரபாபு நாயுடு கைது எதிரொலி!!! ஆந்திர மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்!!!

ஆந்திர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து ஆந்திர மாநிலம் முழுவதும் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

#image_title

ஆந்திர பிரதேச மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு அவர்களின் தலைமையில் 2014ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை ஆட்சி நடைபெற்று வந்தது. சந்திரபாபு நாயுடு அவர்கள் முதல்வராக இருந்த காலத்தில் திறன் மேம்பாட்டு கழக நிதியில் இருந்து 550 கோடி ரூபாய் வரை ஊழல் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் குற்றப் புலனாய்வுத் துறை காவல் துறையினர் கடந்த சில ஆண்டுகளாக விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களை குற்றப் புலனாய்வுத் துறை காவல் துறையினர் அதிரடியாக காவல் செய்தனர்.

நேற்று முன்தினம்(செப்டம்பர்9) கைது செய்யப்பட்ட ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களை நேற்று(செப்டம்பர்10) விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுத் துறையினர் ஆஜர்படுத்தினர்.

பின்னர் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு விஜயவாடா ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அது மட்டுமில்லாமல் சந்திரபாபு நாயுடு அவர்களின் ஜாமீன் மனுவையும் ஊழல் தடுப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து சந்திரபாபு நாயுடு அவர்கள் ராஜமுந்திரியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று(செப்டம்பர10) சிறையில் அடைக்கப்பட்ட சந்திரபாபு நாயுடு அவர்கள் செப்டம்பர் 23ம் தேதி வரை நீதிமன்ற காவலில் இருக்க வேண்டும்.

சந்திரபாபு நாயுடு அவர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சி இன்று(செப்டம்பர்11) முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் இன்று(செப்டம்பர்11) காலையில் ஆந்திர மாநிலத்தில் போக்குவரத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் விதமாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர்களை காவல் துறையினர் வீட்டு காவலில் வைத்துள்ளனர். தெலுங்கு தேசம் கட்சி அறிவித்துள்ள முழு அடைப்பிற்கு பாஜக, ஜனசேனா கட்சி இரண்டும் ஆதரவு அளித்துள்ளது. இதனால் ஆந்திர மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவி வருகின்றது. இதையடுத்து ஆந்திர மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.