சந்திரமுகி 2 வில் யார் ஹீரோயின்… சில வருடங்களுக்கு பின் ரி எண்ட்ரி கொடுக்கும் ஹிட் நடிகை!

0
117

சந்திரமுகி 2 வில் யார் ஹீரோயின்… சில வருடங்களுக்கு பின் ரி எண்ட்ரி கொடுக்கும் ஹிட் நடிகை!

சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி படத்தை  பி.வாசு இயக்கி, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், வடிவேலு, பிரபு, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்த இத்திரைப்படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் சென்னை சாந்தி திரையரங்கில் 890 நாட்கள் ஓடியது. ரஜினியின் சினிமா கேரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது

இதையடுத்து இப்போது 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. சந்திரமுகி2 வில் ரஜினிக்குப் பதில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். முதல் பாகத்தில் காமெடியில் கலக்கிய நடிகர் வடிவேலு இந்த படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பாகுபலி மற்றும் RRR ஆகிய திரைப்படங்களின் இசையமைப்பாளர் மரகதமணி இசையமைக்கிறார்.

இப்போது படத்தின் ஷூட்டிங் மைசூரில் நடந்துவரும் நிலையில் இதுவரை படத்தின் கதாநாயகி யார் என்பது அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளது லஷ்மி மேனன் என்று சொல்லப்படுகிறது. இதை விரைவில் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என தெரிகிறது.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் ஹிட் நடிகை என்ற செண்ட்டிமெண்ட்டோடு வலம் வந்தவர் லஷ்மி மேனன். அவர் நடித்த படங்கள் பெரும்பாலானவை வெற்றிப் படமாக அமைந்தன. ஆனால் சமீபகாலமாக அவருக்கு பெரிதாக படங்கள் இல்லை. கடைசியாக புலிக்குத்தி பாண்டி திரைப்படத்தில் நடித்திருந்தார்.