Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பொறியியல் கலந்தாய்வு விதியில் மாற்றம்!! வெளிவந்த புதிய அரசாணை!!

Change in engineering consultation rule!! Promulgation of Ordinance!!

Change in engineering consultation rule!! Promulgation of Ordinance!!

பொறியியல் கலந்தாய்வு விதியில் மாற்றம்!! வெளிவந்த புதிய அரசாணை!!

இந்த ஆண்டிற்கான பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இதற்கான தேர்வு முடிவு கடந்த மே மாதம் எட்டாம் தேதி வெளிவந்தது.

இதனையடுத்து மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தத் துறையை தேர்ந்தெடுத்து வருகின்றனர். சிலர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்தும் வருகின்றனர்.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தற்போது முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை 3 ஆம் தேதி கல்லூரி திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

அந்த வகையில் 2023- 2024 ஆம் ஆண்டிற்கான பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விதியில் சற்று மாற்றம் செய்து அரசாணை வெளியடப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு ரேண்டம் எண்கள் வழங்கப்படும். அதனையடுத்து இவர்களுக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு அதன்பின் கலந்தாய்வு நடைபெறும்.

ஒரே மாதிரியான கட்ஆப் –ஐ மாணவர்கள் பெற்றிருந்தால் அவர்களின் மதிப்பெண் மற்றும் பிறந்த தேதியை வைத்து முன்னுரிமை வழங்கப்படும்.

இந்த ஆண்டிற்கான பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலில் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடப்படாது என்று மாணவர் சேர்க்கை விதியில் மாற்றம் செய்து அரசானை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ரேண்டம் எண்கள் வரிசையில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்றும், ஒரே கட்ஆப் வரும் போது பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணை கணக்கில் எடுத்துக்கொள்வது வழக்கம். ஆனால் கரோனா காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வு ரத்தானதால் மதிப்பெண் கணக்கில் சேர்க்கப்படாது என்றும் கூறி உள்ளனர்.

ஜூலை 7 ஆம் தேதி முதல் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு தொடரும் என்றும், அதற்கு முன் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளிவந்துள்ளது.

Exit mobile version