Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பள்ளி கல்லூரிகளின் விடுமுறையில் மாற்றம்!! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

New change in general exam date!! Important information released by the Minister of Education!!

New change in general exam date!! Important information released by the Minister of Education!!

பள்ளி கல்லூரிகளின் விடுமுறையில் மாற்றம்!! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

பொங்கல் பண்டிகை ஆனது சனிக்கிழமை தொடங்க ஆரம்பித்ததில் இருந்து தொடர்ந்து நான்கு நாட்களுக்கு தமிழக அரசு விடுமுறை அளித்திருந்த பட்சத்தில் வெளியூர் பயணிகள் மீண்டும் அவர்களது ஊருக்கு செல்வதற்கு ஏற்றவாறு வரும் புதன்கிழமையும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

தொடர்ந்து நான்கு நாட்கள் அரசு விடுப்பு அளித்துள்ள நிலையில் இவ்வாறு கூடுதலாக ஒரு நாள் விடுப்பு அளிக்க முடியாது என்று தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது. ஆனால் நேற்று முதல் சமூக வலைத்தளத்தில் வரும் புதன்கிழமை கூடுதல் விடுமுறை தமிழக அரசு அறிவித்ததாக ஒரு செய்தியானது வைரலாகி வந்தது.

இந்த செய்தியை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை என்று கூறியதால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் திக்கற்ற மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் இவ்வாறு எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடவில்லை என மறுப்பு தெரிவித்து திட்டவட்டமாக தற்பொழுது கூறியுள்ளது.

மேலும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இது குறித்து கூறியுள்ளதாவது, முன்னதாகவே நான்கு நாட்கள் தொடர் விடுமுறையால் கூடுதலாக ஒரு நாள் விடுப்பு அளிக்க முடியாது. வழக்கம்போல் புதன்கிழமை அன்று பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version